விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என திமுக பதில் அளிக்குமா? அண்ணாமலை கேள்வி!!
தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து இன்று வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக.. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்து - ஏன்.? எதற்கு தெரியுமா.?
குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடப்பட்டுள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிவிப்பின் போது அறிவித்த நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 கரும்பு டன்னுக்கு ரூ.4,000 தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பும் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வேளாண் பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் பட்ஜெட்... வைகோ வரவேற்பு!!
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000 ஆகவும் ‘உயர்த்துவோம் என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக பதில் அளிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.