சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டதால் திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டதால் திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி ஆரம்பித்து விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ’’இந்தியாவிலேயே வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் எண்ணற்ற நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ரூ.70 ஆயிரம் கோடி வரை சமூகநலன்களுக்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் இன்று ‘சாத்தான் வேதம் ஓதுவது போல’ ஊழல்... ஊழல்... என்று தி.மு.க.வினர் பேசிவருகிறார்கள். இப்போதைக்கு தி.மு.க.வின் நம்பிக்கை பிரசாந்த் கிஷோர் தான், மு.க.ஸ்டாலின் அல்ல. ஆனால் அ.தி.மு.க.வின் நம்பிக்கை தமிழக மக்கள் மட்டுமே.
காவிரி பிரச்சினை, கச்சத்தீவு விவகாரம் என தமிழக உரிமைகளை காவுகொடுத்தவர்கள் தி.மு.க. தான். கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான். இன்று சனிப்பெயர்ச்சி எனவே திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது. நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஜெயலலிதா கூறியபடி, அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் தாண்டியும் தழைத்திருக்கும். தமிழகத்தில் தீயசக்தியை விரட்டியடித்து, மீண்டும் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சியை மலரசெய்வோம் என சூளுரை ஏற்போம்’’என அவர் பேசினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 28, 2020, 10:23 AM IST