தஞ்சாவூர் 

சிறு நீர்ப் பாசன திட்டம் என்றுதான் தெரிவித்தேன் என்றும் அதை தவறாக வலைதளங்களில் பரப்ப தி.மு.க. பண உதவி செய்கிறது என்றும் எச்.ராஜா தெரிவித்தார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து அக்டோபர் மாதத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தேசிய தலைவர் அமித்ஷாவே கூறி உள்ளார்

தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் உள்ளது. இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நக்சல்களும் காரணம். இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில அரசியல் கட்சியினர், மற்றும் நக்சல்கள் அமைப்பினரின் மாயாஜல வார்த்தைகளை நம்ப வேண்டாம்." என்று அவர் கூறினார்.  

இந்த நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் பாலசெல்வம், ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்