பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தை தன்னிடம் வைத்துகொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். ஆகையால், கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த இந்த அதிகாரம் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கி கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில், 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பொதுச்செயலாளர் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமாக பொதுச்செயலாளரின் அதிகாரம் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளராக உள்ள 97 வயதான க. அன்பழகன், கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவருடைய உடல்நிலை சீராக இல்லை. கடைசியாக 2017-ல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் க. அன்பழகன் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி கூட்டங்கள் எதிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. வயது முதிர்வு, உடல்நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து வீட்டியே ஓய்வில் இருந்து வருகிறார்.
இதன் காரணமாகவே பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தை தன்னிடம் வைத்துகொள்ள மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். ஆகையால், கட்சி பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த இந்த அதிகாரம் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கி கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 10, 2019, 1:46 PM IST