சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். 

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (98) மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி இரவு 8.15 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக தகவலறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவர்களிடம் பேராசிரியர் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். 

இதையும் படிங்க;- எடப்பாடி கடிதத்தை தூக்கி எறிந்த திருப்பதி தேவாஸ்தானம்..? EX எம்.எல்.ஏ.வை அவமானப்படுத்தி வெளியேற்றம்.!

இதனையடுத்து, க.அன்பழகன் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் க.அன்பழகனை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு 7 மணியளவில் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் அன்பழகன் விரைவில் குணமடைந்து உடல் நலம் பெற தாம் விரும்புவதாக கூறினார். பொது வாழ்க்கையில்  தூய்மையான தலைவர் அன்பழகன் என்றும் ராமதாஸ் பாராட்டினார். 

இதையும் படிங்க;- இதை மட்டும் எடப்பாடி செய்தால் என்னோட ஆதரவு அவருக்கு தான்... டிடிவி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

நேற்று முன்தினம் க.அன்பழகனின் உடல்நலம் குறித்து பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.