பணம் கொடுத்து ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு என ஆளும் கட்சியை அல்லு தெறிக்க விட்டுள்ளார் முன்னால் அமைச்சரும் முன்னால் திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம், தொடர்ந்து அரசியல் கட்சிகளால் மெஜாரிட்டி இல்லாத ஆட்சி என விமர்சிக்கும் திமுகவால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆற்காடு வீராசாமி, அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பத்து பேரை நாங்கள் வெளியே எடுத்து வர நினைத்தால், அவர் எப்படி முதலமைச்சராக தொடர முடியும்? எங்களுக்கு பண வசதி இருந்ததென்றால் நாங்கள் அதை செய்து காட்டத் தயாராக இருக்கிறாம், பணமிருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. 

பணமிருந்தால் எம்எல் ஏக்களை எங்கள் பக்கம் இழுப்போம் எனச் சொல்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் இல்லையா? என நெறியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயகத்திற்கு விரோதமான தென்றாலும் கூட அரசியலில் இது சகஜம் தான். ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதேன்பது எதிர் கட்சிகளுக்கு ஏற்படுகின்ற ஒரு வாய்ப்பு எனவே தான் அதிமுக ஆட்சியை மக்கள் எப்படி எதிர்பாக்கிறார்கள் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் அந்த ஆட்சியைப் பற்றிய ஓஹோவென நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் என்னத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எங்களிடம் பணமிருந்தால் பத்து எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் இழுத்தால் அல்லது கட்சியை விட்டு வெளியேற்றினால் அந்த கட்சி ஆட்சியிலிருந்து விலகிவிடும் எனக் கூறினார்.

ஒரு மூத்த தலைவராக இருக்கும் நீங்கள் இப்படிச் சொல்வது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது என நெறியாளர் கேட்கயில், இதில் என்ன ஆச்சர்யம் உதாரனத்திற்கு சொல்கிறேன் MLC க்கு போட்டிப் போடும் பொழுது திமுகவிடம் 28 ஓட்டு மட்டுமே இருந்தது. வெற்றிபெற 34 ஓட்டு வேணும், அனால் கலைஞரும் என்னைக் கேட்டார் எந்த தைரியத்தில் நீங்கள் வெற்றிபெற முடியும் என கேட்டார். அதிமுக காங்கிரஸ் சுயேட்சைகள் என 7 அல்லது 8 பேரை நம்பக்கம் இழுக்க முடியும் என நான் சொன்னேன். மீண்டும் நிச்சயமாக நீங்கள் வெற்றிபெற முடியுமா எனக் கேட்டார். நானும் செய்து காட்டுகிறேன் எனச் சொன்னேன் அதேபோல வெற்றிபெற்றேன்.

ஆளும் கட்சியில் இருக்கக் கூடியவர்கள் யார் யார் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதை நம்மால் அவர்களின் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமேயானால் பத்து பேர் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருப்பார்கள். 

பணவசதி மட்டுமே காரணமா இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு என நேரியாளர் கேட்டதற்கு, ஆமாம், வேறெந்தக் காரணமும் இல்லை, பணம் இருந்தால் கவிழ்த்துவிடலாம். உதாரனத்திக்கு சொல்கிறேன் ஒரு பத்து கோடி கொடுத்தால் ஒருவர் வெளியே வருவார் என்றால் மொத்தம் 100 கோடி இருந்தால் பத்துப் பேரை அழைத்து வந்துவிடலாம். அந்த 100 கோடி எங்களிடம் எங்கே இருக்கிறது அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை நிச்சயமாக அதை செய்து காட்டுவேன் என தில்லாக சொன்னார். 

மேலும் பேசிய, அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏக்களை இழுக்கவேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லாததற்கு காரணம், அவர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இன்றைக்கு நாம் அதைச் செய்தால் நாளை அவர்களும் இதையே செய்யக் கூடும் என்பதால் தான் அவர் அதிகமாக இதில் கவனம் செலுத்தவில்லை என்றார்.

பணம் வசதிதான் இந்த ஆட்சியை கவிழ்க்க காரணமா? என மீண்டும் தெளிவாகக் கேட்ட நெறியாளரின் கேள்விக்கு ஸ்ட்ராங் பதிலில், எனக்கு 100 கோடி பணமும், ஒரு வாரம் நேரம் கொடுங்கள் பத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து வந்துவிடுவேன் என தெளிவான பதில் அளித்துள்ளார்.