அதிர்ச்சி: திமுக முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை...! நெல்லையில் பரபரப்பு..! 

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரெட்டியார்பட்டியில் உள்ள  உமா மகேஸ்வரியின் வீட்டிற்கே சென்று அவரை வெட்டிக் கொலை செய்து உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் பணிப்பெண் என மூவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக்கொலை செய்து உள்ளனர். 

கொலைகான காரணம் தொழில் ரீதியான போட்டியா ? அல்லது அரசியல் பின்புலத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மேயரான உமாமகேஸ்வரியின் பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா என்ற பாணியிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.