Asianet News TamilAsianet News Tamil

காபி பேஸ்ட் தி.மு.க: கமல் கட்சியைப் பார்த்து ஸ்டாலின் தி.மு.கவை நடத்துவதாக தொண்டர்கள் குமுறல்

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் வெளியிட்டவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புதிய திட்டங்களை அறிவிப்பது போல் ஸ்டாலின் இத்திட்டங்களை அறிவித்தது, மக்கள் நீதி மய்யத்தை பார்த்து தி.மு.கவை ஸ்டாலின் நடத்துவதாக தி.மு.க தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

 

dmk followers angry with mk stalin for copying makkal needhi maiam
Author
Chennai, First Published Mar 8, 2021, 10:32 PM IST

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் வெளியிட்டவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புதிய திட்டங்களை அறிவிப்பது போல் ஸ்டாலின் இத்திட்டங்களை அறிவித்தது, மக்கள் நீதி மய்யத்தை பார்த்து தி.மு.கவை ஸ்டாலின் நடத்துவதாக தி.மு.க தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

தி.மு.க சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்ட பேரவை தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்ள கூட்டிய கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தி.மு.கவினர் பொதுக்கூட்டதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தி.மு.க அடுத்த 10 ஆண்டுகள் செய்யக்கூடிய திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். அதில், ஏழு முக்கிய துறைகளில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் ஸ்டாலின் விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வெளியிட்ட திட்டங்கள் என்று துறைமுகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட திட்டங்களை தி.மு.கவினர் காபி பேஸ்ட் அடித்து வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

கமல்ஹாசன் வெளியிட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000ரூ ஊதியம் என்பதை “நான் தாரேன் ஆயிரம்” என்றும், 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஆண்டு தோறும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றும், 1 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு மேல்கொண்டு வருவோம் என்பதை, செயல்கோட்டிற்கு மேல் கொண்டு வருவோம் என்றும், டிஜிட்டல் தற்சார்பு கிராமங்கள் என்பதை பிராட்பேண்ட்  (broadband) என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர். 

ஸ்டாலின் தெரிவித்த உறுதி மொழிகள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டது

என்றும் “ஸ்டாலின் அவர்களுக்கும் நாங்கள்  தான்  சொல்லி கொடுக்கிறோம், நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால், ஒன்றிணைவோம் வா என்று சத்தமில்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வருகிறது என்று கமல்ஹாசன் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும், “எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்து கொண்ட கழகம், எங்கள் நேர்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்” என்றும் கமல்ஹாசன் தன்னுடைய பாணியில் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பலரும் டிவிட்டரில் தி.மு.கவை கேலி செய்து பதிவுகளை செய்து வருகின்றனர். தங்களுடைய துண்டுசீட்டு ஒன்று பறந்து சென்றுவிட்டதாகவும் காப்பி அடித்தாலும் ஸ்டாலினால் பாஸ் ஆக முடியாது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் ஸ்ரீபிரியா  தெரிவித்துள்ளார். 

மேடை அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், அந்த மேடையின் அளவு, அமர வேண்டிய இடம், இருக்கைகள், அக்கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் யார், பேச வேண்டிய அம்சங்கள் என்ன, யாரையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தினார். ஆனால், மக்கள் பிரச்சனைகள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறியாதது அக்கட்சியின் 50 ஆண்டுகால அரசியலை கேள்வி குறியாக்கியுள்ளது. 

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சமுதாயத்தினர் இருக்கிறார்கள், அவர்களின் ஓட்டு வங்கி எவ்வளவு என அலசி ஆராய்ந்த ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளை குறித்து அறியாமல் ஊர் ஊரக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றும், மூன்றாவது அணி வெளியிட்ட நலத்திட்டங்களை ஸ்டாலினும் வெளியிட்டது ஸ்டாலினின் மிகப்பெரிய தேர்தல் சொதப்பல் என்று தி.மு.கவினரே நொந்தபடி தெரிவித்தனர். 

அது எப்படி கமல் தெரிவித்த அதே நலத்திட்டங்களை, ஸ்டாலின் அவர் பிரச்சாரத்தில் சொல்லி கைத்தட்டு வாங்குகிறார் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கேட்க, எல்லாத் தரப்பிலிருந்தும் கேள்விகள்எழுகிறது. ஐபேக் மூலம் கடன் வாங்கிய மூளையில் தேர்தல் வியூகத்தை திட்டமிட்டு செயல்படுத்தி வரும் தி.மு.க தனது திட்டங்களையும் மக்கள் நீதி மய்யத்திடம் கடன் வாங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடிகின்றனர். தேர்தலுக்கு முன் தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டப்பட்ட கூட்டம் சொதப்பலில் முடிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிகின்றனர். தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்த திருச்சி பொதுக்கூட்டம் ஸ்டாலினால் மிகப்பெரிய தேர்தல் சொத்தப்பல் கூட்டமாக அமைந்துவிட்டதாக தி.மு.கவினர் வருத்ததுடன் கூறினார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios