சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர கொடிக்கம்பம் வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே எந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு அதிக உயர கொடி கம்பம் வைக்க திமுக முடிவு செய்தது. 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் மும்பரமாக நடந்தது. அதேபோல ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை அருகே கருணாநிதியின் சிலையையும் அமைக்க முடிவு செய்து, அண்ணா சிலை அகற்றப்பட்டு, ஒரே இடத்தில் இரு சிலைகளையும் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இந்த சிலைகள் திறப்புவிழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில், அதாவது இந்தியாவிலேயே எந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு அதிக உயர கொடி கம்பம் வைத்தது. 

14 லட்சம் செலவில், 2,430 கிலோ எடைகொண்ட இந்த கம்பம் அறிவாலயத்தில் நடப்பட்டது. 30 அடி நீளம் 20 அடி அகலம் கொண்ட இந்த கொடியை மின்னணு மூலம் ஏற்றப்பட்டது. இந்த கொடி உச்சிக்கு சென்று பறக்க 12 நிமிடங்கள் ஆகும்.

இந்நிலையில், கருணாநிதி சில திறப்பு விழாவிற்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதியதாக நடப்பட்ட கம்பத்தில் திமுக கட்சிக்கு கொடியை ஏற்றினார். திமுக தலைவர் முக ஸ்டாலின்.

என்ன கொடி பறக்குதா?