Asianet News TamilAsianet News Tamil

கொடிக்கம்பம் அகற்றம்.. அண்ணாமலையின் ஆளுமையும், பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அஞ்சுகிறது.. நாராயணன் திருப்பதி

நேற்று இரவு முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் முன் இருந்த கொடி கம்பத்தை அகற்ற காவல் துறையினர் காட்டிய மும்முரம் வியப்பளிக்கிறது. 

DMK fears the growth of BJP.. narayanan thirupathy tvk
Author
First Published Oct 21, 2023, 8:52 AM IST | Last Updated Oct 21, 2023, 8:52 AM IST

ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டின் அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பத்தை பாஜகவினர் அமைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே இந்த சம்பவத்தை அறிந்த பாஜகவினர் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் உருவானதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இதையும் படிங்க;- ஒரு சீட்டுக்கு திமுகவிடம் கையேந்தி 5க்கும், 10க்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்! இந்தியாவின் சாபக்கேடு.! பாஜக

DMK fears the growth of BJP.. narayanan thirupathy tvk

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் நட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வரழைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது சிறிய தடியடி நடத்தி போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

DMK fears the growth of BJP.. narayanan thirupathy tvk

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில்;- நேற்று இரவு முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் முன் இருந்த கொடி கம்பத்தை அகற்ற காவல் துறையினர் காட்டிய மும்முரம் வியப்பளிக்கிறது. இரவோடு இரவாக இதை தட்டி கேட்ட பாஜகவினர் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு சீர்கேடு, செயின் பறிப்பு, திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் என சென்னை மாநகரமே திக்கு முக்காடி கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கொடி கம்பத்தை அகற்ற நூற்றுக்கணக்கான போலீசாரை ஏவி பாஜக தொண்டர்களை தாக்கி, காயப்படுத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இதையும் படிங்க;-  அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாட தடை? இது முதல்வருக்கு தெரியாம நடந்திருக்க வாய்பே இல்லை!வானதி சீனிவாசன்

DMK fears the growth of BJP.. narayanan thirupathy tvk

இரவோடு இரவாக இந்த நடவடிக்கை என்பது பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அஞ்சுகிறது என்பதையும், அண்ணாமலை அவர்களின் ஆளுமையை, அவரின் துணிவான அரசியலை கண்டு திமுக கலங்கி போயுள்ளதையுமே உணர்த்துகிறது. ஃபாஸிஸ திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios