Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகன் மகனுக்கு ஆப்பு... பாமகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்..!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் திமுகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

DMK executives joined in PMK party
Author
Tamil Nadu, First Published Mar 16, 2019, 12:46 PM IST

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் திமுகவிலிருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.DMK executives joined in PMK party

 

மக்களவை தேர்தலில் திமுக வேலூர் தொகுதியில் களமிறங்க உள்ளது. அங்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்தை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் வேலூரில் கடும் போட்டி நிலவுகிறது. வேலூர் தொகுதியில் வன்னியர் வாக்குவங்கி செல்வாக்காக உள்ளது. இது திமுகவுக்கு பலமாக கருதப்படுகிறது.

 DMK executives joined in PMK party

பாமகவுக்கும் செல்வாக்கு உள்ளது தொகுதி. ஆனாலும் சாதி பலத்தால் துரைமுருகன் மகனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுகவினரே அதற்கு ஆப்பு வைத்து உள்ளனர். வேலூரில் திமுகவின் முக்கிய பொருப்பாளரும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்றவருமான  முன்னாள் சேர்மன் சிவூர் துரைசாமி விலகி தற்போது பாமகவில் இணைந்துள்ளார்.DMK executives joined in PMK party

தேர்தல் நேரத்தில் அவரது முடிவு வேலூர் மாவட்டத்தில் பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதும் மேலும் பலர் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தல் நேரத்தில் திமுக நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் வெற்றிக்கு பின்னடவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios