அவசரமாக கூடும் திமுக செயற்குழு கூட்டம்; அன்பழகன் அறிவிப்பு!

First Published 10, Aug 2018, 1:22 PM IST
DMK executive meeting convened; Anbazhagan Announcement!
Highlights

அண்ணா அறிவாலயத்தில் வரும் 14-ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் வரும் 14-ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக தி.மு.க பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகனை இன்று காலை மு.க ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுக்குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினுடன் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் சென்றனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வரும் 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 

loader