கட்சியில் அண்ணாவின் பெயரை  வைத்துக்கொண்டுள்ள  அதிமுக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி வளர்ச்சி நிறுவனமாக மாற்றியுள்ளது  வெட்கக் கேடானது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.   மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மிக கடுமையாக கண்டிப்பதாக கூறினார். 

 

இது குறித்து  தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் மா.பாண்டியராஜன் இன்றைக்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார் அதில்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்தே  ஹிந்தி மொழி கற்பித்து வருவதாகவும்,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே அது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு தலைவியாக ஏற்றுக் கொண்ட ஒருவரை வசதியாக காட்டிக் கொடுக்கக் கூடிய வகையில், ஹிந்தி பயிற்ச்சி ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகிறது என சொல்வது அரசியல் சூழ்நிலைவாதத்தை காட்டுகிறது என்றார்.  

அது ஒருபுறம் இருப்பினும் கூட 2019-2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதை  ஒரு புதிய அறிவிப்பாக வெளியிட வேண்டிய அவசியம் ஏன்.? வந்தது.  என கேள்வி எழுப்பினார்.  ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்திற்கு  ஏன் புதிதாக பணம் ஒதுக்குவதாக ஹிந்தி வளர்ச்சித்துறை (தமிழ் வளர்ச்சித் துறை) அமைச்சர்  சொல்லியுள்ளார்.  என்பது ஒரு குழப்பமாக உள்ளது. அதற்காக வெளியிட்டுள்ள அரசாணையில் பிறமொழியிலிருந்து  பயிற்சி அறிவிப்பதாக சொல்லியுள்ளார்கள். பிற மொழி என்று அரசாணையில் சொல்லியிருப்பது ஹிந்திதான் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த இரண்டு கேள்விகளுக்கும்  அமைச்சர் மா. பண்டியரஜன்பதில்சொல்லவேண்டும். 

 பின்னணியில் ஹிந்தி இருப்பதை ஒளித்து வைத்துக் கொண்டு பிற மொழிகள் என்ற போர்வையில் ஹிந்தியை பின்வாசல் வழியாக தமிழகத்திற்குள் கொண்டு வரும் முயற்சியை அதிமுக அரசு எடுத்து வருகிறது என்பதுதான் அதில் உள்ள உண்மை. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இந்த அமைப்பு 1968 உருவாக்கப்பட்டது,  ஹிந்தி வந்துவிடக்கூடாது என்று போராடினார் அண்ணா, ஆனால் அவரால்    உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு கட்சி நடத்தும் அதிமுக  தமிழ் வளர்ச்சிக்காக இருக்கக்கூடிய நிறுவனத்தை ஹிந்திக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல் என்று நான் கருதுகிறேன் என்றார்.