வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று திமுக பொருளாளர் துரைமுருகன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோர் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்,   திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் கவலை இல்லை என்று துரை முருகன் தெரிவித்திருந்த நிலையில் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது திமுக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒருவித சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக இருந்தது  அப்போது பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக சாடியுள்ளார் . 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த சில தினங்களாக  திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து இரு கட்சியின் முன்னணி  தலைவர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர் . இதில்  திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்து விட்டது  என அதிமுக,  பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து ரசித்து வந்தனர்.   ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில்  சந்தித்த கே.எஸ் அழகிரி கூட்டணி விவகாரம் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் . இந்நிலையில்  மனிதநேய  மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து  வேலூரில் மாநாடு  நடைபெற்றது ,  இந்த மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர்  ஒன்றாக பங்கேற்றனர் .  கடுமையான கருத்து மோதலுக்கு பின்னர் இருவரும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் அதில் பேசிய துரைமுருகன் இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் பிறந்தவர்கள்தான் ,  மதத்தால் மட்டுமே வேறுபட்டவர்களே தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை என்றார் ,  ஹிட்லர் யூதர்களை அழித்தது போல இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்கள் என்றார்,   பின்னர் பேசிய கே.எஸ் அழகிரி ,  திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது .  இந்தக் கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்,   அதிமுகவில் அமைச்சர் செல்லூர் ராஜூ தான் விஞ்ஞானி என்று பார்த்தால் அமைச்சர்  ஜெயக்குமாரும்  விஞ்ஞானியாக இருக்கிறாரே  என்றார் அவர்.   அப்போதே தன் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் துரைமுருகன் மௌனமாக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது .