Asianet News TamilAsianet News Tamil

அடங்காத திமுக... வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து அவமதிப்பு வழக்கு..!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாததால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் தேர்தல் பணி விறுவிறுப்படைந்தது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 

DMK contempt case against state election commission
Author
Delhi, First Published Dec 17, 2019, 12:11 PM IST

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாததால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் தேர்தல் பணி விறுவிறுப்படைந்தது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 

DMK contempt case against state election commission

இதனிடையே, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மேலும் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

DMK contempt case against state election commission

அதில், ஏற்கனவே டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை செயலாளருக்கு எதிராக இந்த வழக்கை திமுக தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios