திருநெல்வேலி

தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரசோடு தற்போது தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர் என்று சொல்லியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா திருநெல்வேலியில் நடைப்பெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய எந்தவொரு நல்லத் திட்டத்தையும் எதிர்ப்பவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கான விரோதிகள். 

தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக மத்திய உள்துறை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்து வருகிறது. 

தி.மு.க. ஆட்சியை கலைத்தது காங்கிரசு அரசு. அவர்களுடன்தான் தற்போது தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர்" என்று அவர் கூறினர்.