Asianet News TamilAsianet News Tamil

அடிப்பேன் , உதைப்பேன் , நாக்கை அறுப்பேன் இதுதான் ராஜேந்திர பாலாஜி.!! டார்டாராக கிழித்த ஸ்டாலின்.

வன்முறையும், கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும் பாரம்பரியமும் நல்லிணக்கமும்  கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. 

dmk chief stalin warning and condemned minister ragendra balaji regarding attack journalist
Author
Chennai, First Published Mar 4, 2020, 2:44 PM IST

அமைச்சர் என்ற ஆணவத்தில் அராஜகமாக கொக்கரிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுனர் அமைதி காப்பது ஏன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.   வார இதழ்பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து  ட்விட்டர் பக்கத்தில் கருத்து  பதிவிட்டுள்ள அவர்,  ராஜேந்திர பாலாஜிக்கும் - சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே உள்ள  மோதல் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள்  மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அமைச்சர் எனும் ஆணவத்தில் அராஜகமாகக் கொக்கரிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க  ஆளுநர் தயங்குவது  ஏன்? எனவும் அவர்   கேள்வியெழுப்பியுள்ளார்.   இது தொடர்பாக ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார் அதன் விவரம் :- 

dmk chief stalin warning and condemned minister ragendra balaji regarding attack journalist

வன்முறையும், கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும் பாரம்பரியமும் நல்லிணக்கமும்  கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  அவற்றின் கொடூர அடையாளமாக ராஜேந்திர பாலாஜியின் நடவடிக்கைகள் உள்ளது.   விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் , ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே  நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர்  கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசியலைமப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் இந்த வன்முறையை  தி.மு.கழகத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.  

dmk chief stalin warning and condemned minister ragendra balaji regarding attack journalist

இந் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் தயக்கமின்றி காவல் துறை  நடவடிக்கை எடுத்திட வேண்டும் . என கேட்டுக் கொள்கிறேன்,  எப்போது யாரைப்பற்றி பேசினாலும்,  அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?.   இதற்கு, இந்த முற்றிப்போன நிலையிலாவது, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன், என ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios