ஆட்சி போய்விட்டால் சிறைக்கு செல்ல நேரிடும்  என்ற பயத்தில்தான் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டத்தையும் எடப்பாடி  பழனிச்சாமி  தலைமையிலான அரசு ஆதரிக்கிறது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் .  சட்டமன்றத்தில்  இந்தியக் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தமிழக அரசு  மறுத்துள்ள நிலையில்  ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் ,  இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு , மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட குடியுரிமை  சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது . கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளதுடன் இச்சட்டத்துக்கு எதிராக தங்களது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் . 

அதேபோல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்நிலையில்  தமிழக அரசை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின்  சட்டமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியின் விவரம் :- சட்டப் பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் இரண்டு முக்கியமான பிரச்சினைகளை எழுப்பினேன் ,  18 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக அல்ல ஆளுநரிடம் மனு அளித்தார்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டுமென்று மனு அளித்த காரணத்துக்காக 18 எம்எல்ஏக்களையும் உடனடியாக சபாநாயகர் நீக்கினார் .  ஆட்சியே இருக்ககூடாதென ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பதினோரு பேருக்கு இன்னும் சபாநாயகர் தீர்ப்பு தரவில்லை ,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ,  இந்த பிரச்சினை என்னவாயிற்று.?  இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு  சபாநாயகர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் எனஅறிவித்திருக்கிறார்கள் . 

சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் ஆனால் பேசுவதற்கு என்ன அனுமதிக்கவில்லை ,  சிறுது நேரம் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள் ,   இதேபோல்  குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து அவையில் பலமுறை கேள்வி வைத்துள்ளேன் ,  இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும மக்கள் தொகை கணக்கெடுப்பையாவது தடுத்து நிறுத்துங்கள் என்றும் வலியுறுத்தினேன்,  இது குறித்து அவையில் குரல் எழுப்பினேன்  ஆனால் முதலமைச்சர் சொல்லவேண்டிய பதிலை சம்பந்தமில்லாமல் வருவாய்த்துறை அமைச்சர் ஏதோ பிரச்சாரத்தில் ,  பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல வீராவேசமாக பேசி உதவாத பதில் அளிக்கிறார்.   அதாவது பாஜக ஆட்சிக்கு அஞ்சி ,  நடுங்கி ,  கைகட்டி வாய்பொத்தி ,  ஆட்சி உடனே போய்விடும் என்ற பயத்தில்  ஆட்சி போய்விட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று அஞ்சுகிறார்கள் .  இவர்கள் வண்டவாளங்கள் அனைத்தும்  மத்திய அரசிடம் சிக்கி இருப்பதால் அதற்கு பயந்து அவர்கள் கூறுவதற்கொல்லாம்  கும்பிடு போட்டு காலில் விழுந்து ஏற்றுக் கொள்கிறார்களே தவிர மக்களின் பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை என ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார்.