Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்... உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த அதிரடி வழக்கு..!

பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

DMK case against former minister Vijayabaskar victory
Author
Chennai, First Published Jun 16, 2021, 10:12 AM IST

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார்.

DMK case against former minister Vijayabaskar victory

அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என்று அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

DMK case against former minister Vijayabaskar victory

மேலும், வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios