கருணாநிதி  சிலை  அண்ணா அறிவாலயத்தில் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும்  பொதுக் கூட்டம் நேற்று மாலை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி திமுக  தனது தொண்டர்கள் படையோடு அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி, கட்சித்தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தனது  ஆதரவாளர்களோடு,  தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.  

அதன் பிறகு அவர் முதன் முதலாக கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில்  நடந்தது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்ற செந்தில் பாலாஜியுடன் திமுக தொண்டர்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். கூட்ட நெரிசலில் முகம் சுழிக்காமல் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக்  கொண்ட செந்தில் பாலாஜியின் செயல்  அனைவரையும் நெகிழ வைத்தது.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் நிகழ்ச்சியிலேயே திமுக தனக்கு கொடுத்த வரவேற்பு தன்னை உற்சாகத்தில் ஆழ்த்தியதாக கூறினார்.