கருணாநிதியின் சமாதிக்குச் சென்ற மு.க.அழகிரி, ‘என் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறேன்’ என்று பேட்டி கொடுத்தார். அதையடுத்து இது திமுக வடாரத்தத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது . ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ் போல ‘தர்மயுத்தம்’ அளவுக்குப் பெரிதாக எதுவும்  நடக்கவில்லை . எனவே முடிந்த அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியாக வரும் செப்டம்பர் 5 அன்று கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்த இருக்கிறார் அழகிரி. தனனையும்  கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த பேரணி என என அறிவிப்பு விட்ட  அழகிரி மீது கடும் கோபத்தில் உள்ள திமுக தொண்டர்கள் அழகிரியை இணையத்தில் கிழித்து தொங்க விடுகிறார்கள். 

இந்நிலையில் அழகிரிக்கு அறிவுரை சொல்லும் விதமாக தொண்டர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

நானா விரும்பி வெளியில் வரவில்லை. என்னை வெளியில் அனுப்பிட்டாங்க -அழகிரி பலரின் பேச்சைக்கேட்டு கலைஞர் தவறு செய்துவிட்டார் என்று சொல்கிறீர்களா அண்ணா. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கினார் என்றால் அப்படி என்னதான் அண்ணே தப்பு செய்தீங்க? நீங்கள் தான் வெளிப்படையாக தைரியமாக பேசுகின்றவர்தானே சொல்லுங்கள். 

திமுகவில் அதிமுகவைப் போல பல பிரிவுகள் இல்லை. அப்படி இருக்கையில் கலைஞருக்கு உங்கள் தலைமையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டுக்கொண்டதாக செப் 5 ல் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறி இருக்கிறீர்கள். ஒருபுறம் நான் திமுகவில் இல்லை. அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்கிறீர்கள். 

இங்கேதான் என்னிடம் ஒரு கேள்வி. நீங்கள் தான் திமுகவில் இல்லையே. பிறகு எந்த தொண்டர்கள் உங்களை அஞ்சலி பேரணி நடத்த சொன்னார்கள். திமுகவின் கை ஓங்கிவிடக்கூடாது என நினைக்கும் துரோகக் கட்சிகளின் தொண்டர்களா? 

திமுக ஒரு மாபெரும் இயக்கம்.  இதில் தனிமனித ஈடுபாடு /பங்களிப்பு என்ற ஒன்றே இல்லை . அப்படி இருக்கையில் எப்படி உங்கள் தலைமையில் பேரணி. இது மிரட்டலா இல்லை பிரித்தாலும் சூட்சியா இல்லை துரோகிகளின் வேண்டுகோளா? இல்லை எமது தெய்வம் கலைஞர் உமது காதில் சொன்ன ரகசியமா? 

தலைவர் தளபதியைச் சுற்றியுள்ளவர்கள் சரியில்லை. அவரை தவறாக இயக்குகிறார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறிவந்தீர்களே..... இப்போது உங்களை இயக்குவது யார்?  பதவி கிடைக்காதவர்கள்,  பணம் படைத்தோர்,  உழைப்பில்லாமல் உயர நினைப்போர், திமுகவை பிரித்தாள நினைப்போர் இப்போது உங்கள் பின்னால்.  அதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் அண்ணே!

அடுத்து உங்களின் வாரிசை அதிகம் பேசவிடாதீர்கள். கி. வீரமணி போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் கலைஞரால் பாராட்டப்பட்டவர்கள். போற்றப்பட்டவர்கள். அவர்களின் பேச்சில் பல உள் அர்த்தங்கள் இருக்கும். இதை புரிந்து கொள்ளாமல் கொச்சையாக பதிவிடுவது உங்களின் மதிப்பை மேலும் குறைக்கும். அப்புறம் உங்கள் நிலைமை வண்டுமுருகனின் நிலைதான். 

இதே உங்களின் மகன் தன் தாத்தாவை கருணாநிதி என பதிவிடுகிறார். கழகம் என்பதை தவிர வேறு உறவே இல்லாத நாங்கள் கூட தலைவரின் பெயரை உச்சரிக்காமல் கலைஞர் என்றே காதலுடன் விளிக்கிறோம். உங்கள் மகனைச்சொல்லி குற்றமில்லை. வளர்ந்த விதம் அப்படி. 

அப்புறம் ஒரு விசயம். ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் புகழுடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில் கூட்டம் கரைபுரண்ட வெள்ளமாய் உடலுக்கு அருகில் கூடிவிட்ட நிலையில் கலைஞரை தாங்கியிருந்த அந்த பேழையை விழுந்து விடாமல் தடுக்க தாங்கிநின்றவர்களில் 

இருவர்..... 

ஒருவர்  உதயநிதி 

மற்றொருவர் அருள்நிதி. 

தங்களின் மகன் எங்கிருந்தார்?  மன்னிக்கவும்.  நான் கவனிக்கவில்லை.  புகழுடலை தாங்கவே அங்கே உங்களில் ஒருவர் இல்லை. புகழையா நிலைநிறுத்தப் போகிறீர்கள். 

உறவும் உரிமையும் இல்லாதவர்கள் நாங்கள் புலம்புகிறோம். உங்களிடம் என்ன இல்லை ஏன் இந்த அரசியல் உங்களை ஜோக்கர் ஆக்கி விடுவார்கள் கலைஞரின் மூத்த மகனாக கழகத்திலூம் ஏன் இந்தியாவிலும் இன்னும் அதிக மரியாதையுடன் வலம் வரலாம் கலைஞரின் மகனாய் உங்களின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் ஆனால் கழகத்தில் ஏதோ மனம் ஏற்க வில்லை. 

இந்த நயவஞ்சகர்களின் கூட்டத்தில் உங்களால் கழகத்தை வளர்க்க முடியாது  தளபதி அவர்களின் செயல்பாடுகளை பார்த்து தளபதியின் அண்ணனாக பெருமை படுத்தி கொள்ளுங்கள் பார்த்தீர்களா ராஜாஜி மண்டபத்தில் கூட்ட நெரிசலின் போது தளபதியின் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட்ட உடன் பிறப்புகளை தளபதியை ஏற்று கொண்டதற்கு கலைஞரின் மகன் என்று மட்டும் அல்ல அவரின் உழைப்பும் தான் தயவு செய்து கலைஞரின் மகனாக சிந்தியுங்கள் கண்டிப்பாக தெளிவு கிடைக்கும். 

உங்களுக்கு அறிவுறை சொல்ல வில்லை நயவஞ்சகர்களின் சூழ்ச்சியில் விழுந்து என் தலைவரின் மகனாக அசிங்க பட போவதை நினைத்து மனம் நொந்து சொல்கிறேன் சிந்தியுங்கள். விடைபெறுகிறேன்.. மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம்.
அன்புடன் கழக உடன் பிறப்பு சேக் உசேன் திமுக தஞ்சாவூர்  உறுப்பினர் அட்டை கூட கிடைகாத அடிப்படை தொண்டன் மட்டுமே!