மறைந்த திமுக தலைவர் கருணாநியின் சிலை திறப்பு விழவில் பங்கேற்க ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கட்சிப் பிரமுகர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ழுமு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைய உள்ளது. சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி வரும் 16ம் தேதி சிலை திறப்பு விழா நடக்க உள்ளது. இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல முக்கிய கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் வருகிற 9-ம் தேதி சோனியாவை நேரில் சென்று அழைப்பதற்காக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற ஐயம் நிலவி வந்த நிலையில், ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் திமுக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள். எனவே இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.