திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த ஆஸ்பத்திரி  முன்பு இரவு, பகலாக காத்திருக்கும் திமுக தொண்டர்கள், என் தலைவனை உன்னால் தூக்க முடியாதடா என கெட்ட வார்த்தையில் எமனுக்கு டோஸ் கொடுத்து வருகின்றனர்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இது தமிழகம் முழுவதும் வதந்தியாக பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவேரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். கலைஞர் வாழ்க… எழுந்து வா தலைவா…என முழக்கமிட்டபடி இருந்தனர். போலீசார் அவர்களை கலைந்து போகச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும், அவர்கள் கலைந்து சொல்லாததால் சிறு தடியடி நடத்தப்பட்டது.

பின்னர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்றும்  கழகத் தோழர்கள் கலைந்து செல்ல வேண்டும்  என்றும் அறிக்கைவிட்டார். இதையடுத்து கொஞ்சம் தொண்டர்கள் மட்டுமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பெரும்பாலான தொண்டர்கள் தொடர்ந்து மருத்துவமனை முன்பே தற்போது வரை குவிந்துள்ளனர்.

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கூட, கருணாநிதி எமனுடன் போராடி வெற்றி பெறுவார், எமனுக்கு எமன் அவர், எமனே அவரிடம் தோற்றுப் போவார் என வார்த்தைகளை உதிர்த்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த  தொண்டர்கள் சிலர், எமனுக்கு செமையாக டோஸ் விட்டனர். அது மட்டுமல்லாமல் கெட்ட வார்த்தை பேசி எமனுக்கே சவால் விட்டனர்.

டேய் எம தர்மா… தே.. பயலே !! என் தலைவனை உன்னால் தூக்க முடியாதுடா… என் தலைவனை உன்னால் நெருங்கக் கூட முடியாதுடா என காதில் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் எமனைத் திட்டினர்.

இதே போன்று அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தனர். இரவு பகலாக அங்கு அமர்ந்திருக்கும் திமுக தொண்டர்களுக்கு திமுக எம்எல்ஏ சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.