Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.. எ.வ.வேலுவுக்கு முக்கிய பதவி.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

DMK cabinet list released...Opportunity for newcomers
Author
Chennai, First Published May 6, 2021, 4:57 PM IST

தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுகவுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் உள்ளனர்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நேற்று உரிமை கோரினார். இதனையடுத்து,  கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு எளிமையான துறையில் முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் அவருடன் 34 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.இந்நிலையில், நாளை பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் பட்டியல் விவரம்

1. மு.க.ஸ்டாலின் - பொது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகம், உள்துறை

2. துரைமுருகன்  - நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 

3. கே.என்.நேரு  - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் 

4. பொன்முடி  - உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் 

5. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

6. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  - வேளாண்மை, தோட்டக்கலை

7. கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்துறை

8. தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை

9. ரகுபதி  சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை 

10. முத்துசாமி - வீட்டுவசதி

11. பெரிய கருப்பன் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்

12. தா.மோ.அன்பரசன் ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள்

13. மு.பெ.சாமிநாதன் - செய்தி விளம்பரத்துறை

14. கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,

15. அனிதா ராதா கிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

16.  ராஜ கண்ணப்பன் - போக்குவரத்துறை

17. ராமச்சந்திரன் - வனத்துறை

18. சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

19. செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு

20. காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை

21. மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

22.  மூர்த்தி - வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை

23. சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

24.  சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை

25. பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை

26.  நாசர் - பால்வளத்துறை

27. செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்

28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை

29. மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன்

30.  சி.வி கணேசன் - தொழிலாளர் நலன்

31. மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பம்

32. மதிவேந்தன் - சுற்றுலாத்துறை

33. கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை

34.ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை

Follow Us:
Download App:
  • android
  • ios