காமாலை காரர்களுக்கு அனைத்தும் மஞ்சளாகவே தெரிவதுபோல அரியர் மாணவர்கள் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு அனைத்தும் தவறாகவே தெரிகிறது என மீன்வளத்துறை  அமைச்சர்  ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை ஓட்டேரியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம். நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  பால கங்கா, அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,  ஸ்டாலின் குழப்பமான நிலையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அறிக்கை விடுகிறார். அரியர் தேர்வு பொறுத்தவரை எந்த  விதி மீறலும் நடைபெறவில்லை. காமாலை காரர்களுக்கு அனைத்தும் மஞ்சளாக தெரிவது போல அவருக்கு எல்லாமே தவறாக தெரிகிறது என்றார்.இலங்கை பிரச்சனை மற்றும் முள்ளிவாய்க்கால் பிரச்சினைகள் போன்றவற்றை முதலில் உதயநிதி ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக அரசு தான் என்ற அவர், திமுக துரோகம் செய்து விட்டு தற்போது நாடகம் ஆடி வருகிறது என்றார்.இதனை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

நீட் எந்த காலத்திலும் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்பதுதான் எங்கள் நிலை. கிசான் திட்ட ஊழலில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கபடுவர் என்று தெரிவித்தார். சட்டபேரவை தேர்தலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று துரை முருகன் கூறியதற்கு பதிலளித்த அவர், பேரவை தலைவர் எடுத்தமுடிவு தான் அது என்றார். ஆனால் வழக்கம் போல் அதனை கேட்டுவிட்டு வெளியே வந்து துரைமுருகன் பாடுகிறார். துரைமுருகன் ஒரு நல்ல பாடகர் என்றார்.