அதிமுக- அமமுக இணைப்புக்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பாஜக மாநில பொதுசெயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், ’’மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் அவர் செய்தியளர்களை சந்தித்து பேசுகையில், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் செயல்களை மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக- அமமுக கூட்டணி அமைந்தால் அது எங்கள் தலைமையில் தான் அதிமுக போட்டியிட வேண்டும் என கூறியிருக்கிறா. இதெல்லாம் கொஞ்சம் அதிகம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 6 சதவீதம் வாக்குகளை பெற்று அதன் பிறகு தொடர்ந்து வாக்கு சதவீத சரிவை சந்தித்த தினகரன் தலைமையிலான அமமுக கட்சி.
ஆனால் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என தினகரன் சொல்வது இந்த அரசியல் பற்றியும், அரசியல் கட்சிகளைப் பற்றியும் என்ன நினைக்கிறார் என்பது பற்றி தெரிகிறது. எனது தனிப்பட்ட வேண்டுகோளை சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவருக்கு விடுக்கிறேன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பிரித்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக சசிகலா மற்றும் தினகரன் இருக்க நேர்ந்தால் அவர்களை ஜெயலலிதா அம்மையார் அவர்களின் ஆன்மா கூட மன்னிக்காது.

