சன் பிக்‌ஷர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ’சர்கார்’ படத்தால் தி.மு.க.வும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து பல சங்கடங்களை சந்தித்து வருகிறார்கள்.

 

சில தினங்கள் முன்பு நடந்த ‘சர்கார்’ ஆடியோ விழாவில் அரசியல் தளபதி மு.க.ஸ்டாலின் முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு சினிமா தளபதி விஜய் விஸ்வரூபம் எடுக்கவைக்கப்பட்டார். இதையொட்டி தி.மு.க.தொண்டர்கள் அடைந்த கொதிப்பை அணைக்கவே அக்கட்சி பெரும்பாடு படவேண்டியிருந்தது.

  

இந்நிலையில் ‘சர்கார்’ரீலீஸ் தேதி நெருங்கிவரும் வேளையில் ’தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத ஆளும்கட்சி... எதற்கும் உதவாத எதிர்க்கட்சி,,,அமையட்டும்  தளபதியின் சர்கார் நல்லாட்சி’ என்று போஸ்டர்கள் அடித்து மதுரை முழுக்க ஒட்டி அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர் மன்ற கண்மணிகள். 

இந்த விவகாரத்தில் மு.க. அழகிரியின் உள்குத்து இருக்கலாமென்றாலும், சன் பிக்‌ஷர்ஸ் படத்தை வைத்தே எதற்கும் உதவாத எதிர்க்கட்சி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு பெரும் எரிச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் தி.மு.க.உடன்பிறப்புகள்.