சென்னையில் முதியவர் ஒருவர் மீது திமுக பிரமுகர் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது. 

சென்னை கிரீம்ஸ் ரோடு சுகந்திரா நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தி.மு.க.வின் ஆயிரம்விளக்கு கழக அமைப்பாளராக உள்ளார். இவர் மனைவி செல்வி உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திமுக பிரமுகர் மாணிக்கம் சாலையில் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், காரை கடக்க முயன்றபோது, அவரது வாகனம் லேசாக உரசியது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கத்தின் பெற்றோர், அவரது மனைவி மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை மற்றும் இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதில் அவருக்கு முகத்தில் கன்னம் கிழிந்து ரத்தம் வந்துவிட்டது. தலை, காது, முதுகுப் பகுதிகளில் கடுமையாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து அப்பகுதியினர் தட்டி கேட்டபோது, அநாகரீகமான முறையில் தகாத வார்த்தைகளால் வசைப்பாடியுள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்த போதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணிக்கத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு முன் சென்னையில் ஓசி பிரியாணி கேட்டு அடித்த சூடு அடங்குவதற்குள் பெரம்பலூரில் பெண்களை பியூட்டி பார்லரில் திமுக நிர்வாகி தாக்கியது, திருவண்ணாமலையில் செல்போன் கடையை அடித்து நொறுக்கியது, கருணாநிதி மறைவு சமயத்தில் தள்ளுவண்டிக்காரரை தாக்கி துவம்சம் செய்தது, வேலூரில் காருக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை பெண்டு நிமித்தியது என திமுக ரவுடிகளின் அராஜகம் தொடர்ந்து வருகிறது. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. 

தி.மு.க ஆட்சியில் இல்லாத போதே இப்படிப்பட்ட அராஜகத்தை கட்டவிழ்க்கும் தி.மு.க.வினர், ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகுமோ? தமிழகம் ரவுடிகளின் கூடாரம் ஆகி விடுமோ என பதற்றத்தில் பொதுமக்கள் உள்ளனர்.