நானும் எம்பி ஆக நான்கைந்து முறை வெற்றி பெற்று மக்களை  ஏமாற்றி விட்டேன் , ஆனால் இந்த சின்ன பையன் சாதித்து விட்டான் என அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசையில் முக்கியமானவர் ஜெகத்ரட்சகன் தன்னுடைய கவிநயம் மிக்க பேச்சாற்றலால்  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தொடங்கு  அடிமட்ட திமுக தொண்டர்கள் வரை கவரக் கூடிய ஆற்றல் படைத்தவர் ஜெகத்ரட்சகன் .  அவர் என்னதான் திமுகவில் இருந்தாலும் ஆன்மிகத்தில்  அளவுகடந்த நம்பிக்கை கொண்டவர் ,  தவறாமல் கோவில்களுக்குச் சென்று  பூஜை நடத்துவதுடன்  பக்தி இலக்கிய பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதில் கைதேர்ந்தவனாக இருந்துவருகிறார். 

இதுவரை நான் நீண்டநாளாக  எம்பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவர்,   வாக்கு கேட்கும்போது தொகுதிக்கு போனதோடு சரி வெற்றி பெற்ற பின்னர் தொகுதி பக்கம் கூட தலை வைத்து படிக்காதவர் என்று  மக்களின்  அவ சொல்லுக்கு சொந்தக்காரராக உள்ளார்.  பிறகு மீண்டும் தேர்தல் வந்தால் தொகுதிக்கு போய் வாக்கு கேட்பதோடு சரி,   வெற்றி பெற்றபின் தொகுதிக்கு போவதில்லை  என்பதுதான் அவரது பாலிசி என தொகுதி மக்கள்  அவரை  விமர்சித்து வருகின்றனர்.  வெற்றி பெற்றால் தொகுதிக்கு வந்து மக்களோடு இருப்பேன்  என தேர்தல் நேரத்தில் தெரிவித்த அவர் கடந்த இரண்டு முறையும் வாக்கு கொடுத்தபடி தொகுதியில் எம்பி அலுவலகத்தை கூட திறக்காமல் மக்களை ஏமாற்றியுள்ளார் என்று தொகுதி மக்கள் மத்தியில் கடுமையாக அதிருப்தி உள்ளது .  அதேபோல இந்தமுறை எம்பி அலுவலகத்தை திறப்பார் ,  அவரிடம் தங்கள் தொகுதி குறைகளை தெரிவிக்கலாம் என காத்திருந்த மக்களுக்கு இப்போதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது .

இந்நிலையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் தனக்கான அலுவலகத்தை கடந்த 27ஆம் தேதி வேலூர் மாநகராட்சி பழைய  அலுவலகத்தில் திறந்தார்,   அதில் கலந்துகொண்ட ஜெகத்ரட்சகன் பேசியதாவது :-  நான் கிட்டத்தட்ட நான்கைந்து தடவை எம்பியாக இருந்திருக்கிறேன் ,  இந்த மேடையில் உட்காருவதற்கு எனக்கு சங்கடமாக இருக்கிறது ,  ஏனென்றால் நமது தொகுதியில் இதுபோன்ற ஒரு அலுவலகத்தை நாம் திறக்கவில்லையே என்ற மனக்குறை தான் அதற்கு காரணம் .  இதுவரை நான்கைந்து முறை எம்பியாக வெற்றி பெற்றிருந்தாலும் தனக்கென்று தனி அலுவலகத்தை திறக்காமல் மக்களை ஏமாற்றி விட்டேன் ஆனால் இன்னைக்கு இந்த சின்ன பையன் ஆபீஸ் திறந்து விட்டானே... என்று மனசு சங்கடமாக இருக்கிறது என அவர் பேசியுள்ளார் . அவரின் பேச்சைக் கேட்ட பலர் எம்பி போறபோக்குல உண்மையை இல்ல சொல்லிட்டாரு என அவரை நக்கலடித்து வருகின்றனர்.