திமுகவில் சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை மேற்கு,  சென்னை தென்மேற்கு மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை வடக்கு மாவட்டம், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு,  சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1.சென்னை வடகிழக்கு  மாவட்டம்

* மாதவரம்
* திருவொற்றியூர்

2.சென்னை வடக்கு  மாவட்டம்

*  இராதாகிருஷ்ணன் நகர்
*  பெரம்பூர்
*  இராயபுரம் 

சென்னை வடகிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர்  -   எஸ். சுதர்சனம்

சென்னை வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் -   தா.இளையஅருணா
 
3.சென்னை மேற்கு மாவட்டம்

* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
* ஆயிரம்விளக்கு
* அண்ணா நகர்

4. சென்னை தென்மேற்கு மாவட்டம்

* தியாகராயர் நகர்
*  மயிலாப்பூர்

சென்னை மேற்கு மாவட்டம்

 பொறுப்பாளர் -  நே.சிற்றரசு,

சென்னை தென்மேற்கு மாவட்டம்

 பொறுப்பாளர்  -  மயிலை த.வேலு ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.