Asianet News TamilAsianet News Tamil

எல்.முருகனை நேருக்கு நேர் எச்சரித்த திமுக, விடுதலை சிறுத்தை தொண்டர்கள்.. மதுரையில் பரபரப்பு..

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கலந்து கொள்ள அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் திரண்டு எல். முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர். 

DMK and Vck Cadres  warn L. Murugan face to face. Excitement in Madurai ..
Author
Chennai, First Published Jan 11, 2021, 11:21 AM IST

மதுரையில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற  தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக மற்றும் திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிவாசல் பகுதி வழியாக பாஜகவினரை அனுமதிக்க முடியாது என அப்பகுதி மக்கள் முழங்கியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. மதுரை திருப்பாலை மந்தை திடலில் பாஜக வினர் சார்பில் நம்ம ஊர் தாமரை பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

DMK and Vck Cadres  warn L. Murugan face to face. Excitement in Madurai ..

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கலந்து கொள்ள அவர் மாட்டு வண்டியில் வந்தார். அவர் வரும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திமுகவினர் திரண்டு எல். முருகனை கடுமையாக விமர்சித்து முழக்கம் எழுப்பினர். பிறகு அங்கு வந்த போலீசார் அவர்களை  கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்றின் வழியாக எல். முருகன் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

DMK and Vck Cadres  warn L. Murugan face to face. Excitement in Madurai ..

இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் போலீசார் சமாதானம் செய்ததையடுத்து அவர்கள் களைந்து சென்றனர். இதனையடுத்து பள்ளிவாசல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஊர்வலமாக சென்றவர்கள் பள்ளிவாசல் மீது செருப்பை வீசியதாகவும், அவதூறாக பேசியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்ட்டினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios