கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்களை   சந்திக்கும் போதெல்லாம் மக்களவை முணை சபாநாயகர்,  பாஜகவை கழுவி கழுவி ஊத்தி வருகிறார். காவியை தமிழகத்தில் எங்கள் மூலம் பாஜக கொண்டு வர நினைத்தால் அதற்கு நாங்கள் ஆளல்ல என்றும் தம்பி துரை திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் திமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் செல்லும் இடமெல்லாம் சொல்லி  வருகிறார் தம்பிதுரை. அவரது கருத்துக்களை பாஜக தரப்பில் மறுத்து வந்தாலும், இபிஎஸ, ஓபிஎஸ் ஆகியோர் மௌனம் காக்கின்றனர்.

இந்நிலையில் முன்னாள் எம்.பியும், பத்திரிக்கையாளருமான ரபி பெர்னாடு, திராவிட கோட்பாடுகளும், தமிழ் பண்பாடும் என்ற ஒரு அமைப்பை தொடங்கவுள்ளார். இதற்கு பின் புலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருபவர் தம்பிதுரைதான்.

நாளை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

அதில் திமுக – பாஜக இடையே உருவாகியுள்ள கூட்டணி குறித்து பல தகவல்களை தம்பிதுரை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் ஆளும் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆட்சியை கவிழ்ப்பதற்குரிய  அத்தனை செயல் திட்டங்களையும் பாஜக வகுத்துள்ளதாகவும், அப்படி கவிழும் பட்சத்தில் திமுகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தம்பிதுரைஅந்த கூட்டத்தில் ஆதாரத்துடன் விளக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அதே 15 ஆம் தேதி அதாவது நாளை விழுப்புரத்தில் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழாவில், ஸ்டாலின் பேசும்போது, தொடர்ந்து வெளிவரும் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எது உண்மை என்பது போக போகத்  தெரியும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.