dmk and admk respect in anna memorial

மறைந்த முன்னாள் முதல்வரும் திராவிட அரசியலின் முன்னோடியுமான அண்ணாவின் 49வது நினைவுதினம் இன்று.

1909ம் ஆண்டு பிறந்த அண்ணா, 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி மறைந்தார். இன்று, அண்ணாவின் 49வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாவின் நினைவுதினத்தை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஆட்சியாளர்களுக்கு முன்னதாகவே திமுக சார்பில் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டு விட்டது.