Asianet News TamilAsianet News Tamil

முடிவாகி கிளம்ப தயாராகிவிட்ட திமுக கூட்டணி.. இன்னும் பெர்த்தை கன்பார்ம் செய்யாத கொமதேக..!

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 6 தொகுதிகளைக் கேட்டு வருவதால், கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 

DMK alliance ready to leave finally.. will join KMDK
Author
Chennai, First Published Mar 8, 2021, 10:27 PM IST

திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் திமுக ஒரு தொகுதியை ஒதுக்கியது. இதைத்தவிர ஆதி தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. DMK alliance ready to leave finally.. will join KMDK
திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக அங்கம் வகித்துவரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியோடு மட்டும் இன்னும் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவில்லை. இரு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 6 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வருகிறது. ஆனால், 3 தொகுதிகள் மட்டுமே திமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMK alliance ready to leave finally.. will join KMDK
எனவே திமுக -கொமதேக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ள நிலையில், இக்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்றும் திமுக விரும்புகிறது. எனவே, கொமதேக கேட்ட தொகுதியை ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கே தலா 6 தொகுதிகள் மட்டுமே திமுக வழங்கிய நிலையில், கொமதேகவுக்கு 6 தொகுதிகள் வழங்கப்படமாட்டாது என்றே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios