Asianet News TamilAsianet News Tamil

கொள்ளையடிப்பதற்காக கூடிய கூட்டு குடும்பம் தான் திமுக கூட்டணி - வேலூர் இப்ராஹிம் பேச்சு

குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிப்பதற்காக கூடிய கூட்டு குடும்பமாய் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருவதாக வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

dmk alliance parties act as joint family for corruption says vellore ibrahim vel
Author
First Published Oct 17, 2023, 9:03 AM IST

சுக்ரியா மோடி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்க இருப்பதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் சிறுபான்மையினர் குறித்த பட்டியல் வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பயனடைந்த சிறுபான்மையினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், மேலும் மாவட்ட நிர்வாகம் சிறுபான்மையினர் அணிக்கு விழிப்புணர்வுக்கு செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்ததாக கூறினார்.

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் அரசு பணியாற்றுவது இப்படி தானா? முறைகேட்டிற்கு பின்னனியில் இருப்பது யார்.? சீமான்

பிரதமர் கல்வித் திட்டம், பொருளாதாரத்தில் மாவட்ட ஆட்சியர் கீழ் இருக்க அதிகாரிகள் முகாம் நடத்த வேண்டும். அது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பட்டியல் தரவில்லை என்றால் ஜனநாயக ரீதியாக போராடுவதாக கூறினார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினியை உண்டாக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஊழலுக்கு எதிராக பேச முடியாத, குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிக்க கூடிய கூட்டு குடும்பமாய் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வதும், இஸ்லாமியர்கள் அல்லாஹு அக்பர் சொல்வதும், கிறிஸ்தவர்கள் Praise The Lord சொல்வது வழக்கம். அந்தந்த மதத்திற்கு ஏற்ப தங்கள் சந்தோஷத்தை வெளியிடுகிறார்கள். அதனை திமுக அரசியல் செய்து வருகிறது. அங்கிருந்த பாகிஸ்தான் வீரர்கள் ரன் அடிக்கும் போது மைதானத்தில் தொழுதார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியா.? எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

அப்படி பார்த்தால் இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 முறை அல்லாஹு அக்பர் என்று தொழுது வருகிறார்கள். அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்திய தேசத்தில் அனைத்து மதங்களும் உண்டு, கும்பிடும் கடவுள் வழிமுறைகள் வேற வேற இருக்கலாம் என்றார். மேலும் திருமாவளவனை அயோக்கியன் என்று சொல்வதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இஸ்லாமியர்கள் திமுக ஏமாற்றுவதை உணர வேண்டும் என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios