dmk all party meeting for farmers
திமுக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக வின் இந்த அழைப்பு கடிதம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியே அனுப்பியுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஸ்டாலின் தனித்தனியே அழைப்பு கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த அழைப்பு கடிதத்தை ஏற்றுக் கொண்ட கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேறக சம்மதம் தெரிவித்துள்ளதாக திமுக தலைமை கழகம் கூறியுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை மட்டுமின்றி தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் நிலவரம் குறித்தும் டாஸ்மாக் பிரச்சனை குடிநீர் பிரச்சனை என்று மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
