கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை தொடர்பான தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு விடியோ காட்சித் தொகுப்பை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டார். இந்த விடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாக அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன், மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார், மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகியோர் மீது  3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார், புது டெல்லிக்கு  சென்று அங்கு சயனையும், மனோஜையும் உடனடியாக கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து  மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் டி.எஸ்.அன்பு தலைமையிலான போலீஸார் பல கட்டங்களாக 11 மணி நேரம் விசாரணை செய்தனர். 

இதையடுத்து, திங்கள்கிழமை நள்ளிரவு சைதாபேட்டை நீதிபதி வீட்டில் சயன், மனோஜ்  இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் சயன், மனோஜ்  இருவரையும் விடுவித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார் . மேலும் இருவரையும் வரும் 18-ம் தேதி ரூ.10 ஆயிரம் பிணையுடன் ஆஜராக  உத்தரவிட்டார்.  இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சயன் மற்றும் மனோஜ் தனிநபர் ஜாமீன் உத்தரவாதம் தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தனர். மேலும், ரூ.10,000 பிணைத் தொகையையும் செலுத்தினர். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. 

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால்,சயன், மனோஜ் இருவரையும் திமுகவினர்தான் ஜாமீனில் எடுத்துள்ளனர், இவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தற்போது ஜாமீன்  கிடைத்திருக்கிறது காரணம் ஆஜராஜது,திமுக வழக்கறிஞர்கள். G.பிரபாகரன், A.திருமாறன்,M. அக்பர் பாஷா, K.புருஷோத்தமன்  திமுக வக்கீல்கள் நான்கு பேர் ஆஜராகியுள்ளார்.

கூலிப்படைத் தலைவன் சயன்க்கு மா.சுப்ரமணியத்தின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரும், திமுகவின் 170A வட்டச் செயலாளரும் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளனர். மனோஜ்க்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது 170 வது வட்ட இணைஞரணி செயலாளர் கதிர்வேலு மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஈக்காட்டு தாங்கள் சேர்ந்த ராஜா என்பவரும் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளனர்.

கூலிப்படையினர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படும் இப்படிப்பட்டவர்களுடன் திமுகவுக்கு என்ன சம்பந்தம். 

இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் நேற்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி , தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு அரசியல் தலைவர்களை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதுதான் குறிக்கோள். அந்தவகையில் செட்டப் செய்து வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளனர். இவையெல்லாம் திமுகவின் மூலம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நாடகம். இதனை சட்டரீதியாக சந்தித்து தவிடுபொடியாக்குவோம்” என்றும்  கூறினார்.