26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை பரோலில் விடுவிக்க குரல் கொடுத்தமைக்காக திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். 

ராஜீவ்காந்த் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு பரோலில் விடுதலை ஆகியுள்ளார். 

பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகே இந்த பரோல் கிடைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒரு மாதமும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, போலீசாரிடம் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பேரறிவாளனை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இதனிடையே பேரறிவாளன் பரோலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க குரல் கொடுத்தமைக்காக திமுக செயல்தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.