ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான போராட்டத்தின்போது, கடந்த 30 ஆம் தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் கருத்து கேட்காமல் அதிமுக ஆட்சியில் ஓ.என்.ஜி.சிக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்களை கைது செய்வதில் காட்டும் முனைப்பை மக்கள் நலன் காப்பதில் அரசு காட்டவில்லை அவர் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் மு.க.ஸ்டாலின், திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பேராசிரியர் ஜெயராமனை சந்தித்தார்.