பிரியாணி கடைக்குள் தனது கூட்டாளிகளுடன் புகுந்து, ஊழியர்களை சரமாரியாக குத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகியதால் திமுக நிர்வாகி பாக்சர் யுவராஜை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது திமுக.

கடந்த 28ம் தேதி இரவு பத்து மணிக்கு, பூட்டப்பட்டிருந்த ஹோட்டல், ஷட்டரை திறக்கச் சொல்லி, உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ், சரமாரியாக கேஷியர் முகத்தில் பாக்சரை போல துள்ளி துள்ளி குதித்தபடி கேஷியர் முகத்தில் திமுக நிர்வாகி குத்தும் காட்சி வெளியாகியுள்ளது.

தடுக்கவந்தவர் முகத்திலும் குத்து விடுகிறார், மேலும் அவர் கூட்டாளிகளும் மற்றவர்களை தாக்குகிறார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவானது. இப்போது அந்த காட்சிகளை கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் போலீசில் புகார் அளித்த நிலையில், அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். வீடியோ விரலான நிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். 

கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், கருணாநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு 10 மணிக்கு ஹோட்டல் பூட்டப்பட்ட பிறகு அதை திறக்கச் சொல்லி பிரியாணி கேட்டனர். நாங்கள் பிரியாணி இல்லை என சொன்னதும், தாக்கினர்.
திமுக நிர்வாகியான பாக்ஸர் யுவராஜ், எப்போதுமே "நான் லோக்கல், நான் லோக்கல்" என கெத்தோடுதான் எப்போதும் வருவார். கையில் போட்டிருந்த வளையம், பிரேஸ்லெட் பந்தா காட்டுவார். பாக்சரை போல துள்ளி துள்ளி குதித்தபடி கேஷியர் முகத்தில் திமுக நிர்வாகி குத்தும் காட்சிகள் வெளியாக வைரலாகியுள்ளது. 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்! இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.