திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது. 

கூட்டணி தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை கமல் ஹாசன் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இருமுறை தொலைபேசி வாயிலாக கமல்ஹாசன், உதயநிதியை அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது குறித்து இரு தரப்பினரும் பேசியுள்ளனர்.

 

ரஜினி கட்சி தொடங்க உள்ள நிலையில் கமலை தங்கள் கூட்டணியில் இடம்பெற வைக்க திமுக முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. இத்தனை பேச்சுவார்த்தைக்குப் பிறகும் திமுகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து பேசும் தருணம் இது இல்லை என கமல் பதில் அளித்தார்.  ரஜினியுடன் கூட்டணி அமைக்கத் தயார் என கோவில்பட்டியில் கமல் நேற்று பேசி இருந்தார். இந்நிலையில் அவர் திமுகவுடன் கூட்டணி பேரம் நடத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.