பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்து அவரது சொந்த கருத்து என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்துக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆளாலுக்கு கருத்து சொல்லி குட்டியை குழப்புவதில்  குறியாக  இருக்கிறார்கள் என்று மக்கள் விமர்சிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது, இளம் வாரிசுகளின் அடிக்கும் அல்டிமேட் அரசியல் கமெண்ட்டுகள்.  உதயநிதி ஒரு கருத்துச் சென்னால் உடனே விஜய பிரபாகர் எதிர் கருத்து, விஜய் பிரபாகர் ஒரு கருத்து என்றால் அதற்கு உதயநிதி பதில் கருத்து என்று ஆளாளுக்கு கருத்துசொல்லி அரசியலில் புகுந்து  விளையாடி வருகின்றனர். போதாதக்குறைக்கு இப்போது இளையதளபதி விஜயும் அதில் இணைந்துள்ளார்.

 

சமீபத்தில் பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் அதிமுகவை ஏக போகத்திற்கும் சாடியிருந்தார். யாரை எங்கு வைத்திருக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும் என கூறியிருந்தார். அவரின் பேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் விஜயின் பழைய புராணங்களை எல்லாம் வீதிக்கு இழுந்து ஊருக்கு பந்தி வைக்க போதும்டா சாமி என இரண்டு கைகளிலும் தன் வாயை பொத்திக்கொண்டார் விஜய்.  இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனும்  அக்கட்சியின் இளைஞரணித் தலைவருமான விஜய பிரபாகர் தன் பங்குக்கு நடிகர் விஜயை கலாய்த்து கருத்து கூறியுள்ளார். 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் கூறியுள்ள கருத்து அவரின் சொந்த கருத்து மக்கள் அவரின் கருத்து எப்போதும் ஏற்கமாட்டார்கள் என்றார். அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததால் இந்தளவிற்கு பிரச்சனையாக்கப்படுகிறது. அதே மற்ற கட்சியினரின் பேனராக அது இருந்திருந்தால் அதை யாரும் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள் என்று அவர் விஜயை கடுமையாக சாடியுள்ளார் விஜயபிரபாகர். அவரின் இந்த கருத்து அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், கேப்படனின் புதல்வரை  விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் வைத்து நய்ய புடைந்து வருகின்றனர்.