Asianet News TamilAsianet News Tamil

​எல்லாம் போச்சு... விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு... கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..!

தனித்துப் போட்டியிட முடிவெடுத்தால், முதலுக்கே மோசமாகி விடும் என, மாவட்ட செயலர்களும் தலைமையை எச்சரித்துள்ளனர். 

dmdk to withdraw from the election ... Captain's party in tears ..!
Author
Tamil Nadu, First Published Mar 13, 2021, 10:32 AM IST

அதிமுக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை வழங்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தேமுதிக கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தேமுதிக சேரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனோ, நாங்க தான் சீனியர் கமலுடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு நல்லா இருக்காது என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் கெத்தா பேசினார்.dmdk to withdraw from the election ... Captain's party in tears ..!

ஆனால், டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. அமமுகவிடம் நாம் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்று தேமுதிக கணக்கு போட்டது. நுாறு சீட்டும், அதற்கு மேட்சாக தேர்தல் செலவு நிதியும் கேட்டபோது, ஆனானப்பட்ட மன்னார்குடி மன்னரே கொஞ்சம் ஆடிப் போனாராம். ‛50 ‛சீட்' தரோம்; ஆனா, ‛மேட்சிங்' நிதியெல்லாம் தர வழி இல்லை' என, சொல்லி இருக்கிறார். இதனால் அமமுகவுடான தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்து விட்டதாக தகவல். தற்போது கமல்ஹாசன் கட்சியுடன் வேண்டுமானால் தேமுதிக கூட்டணி வைக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.

dmdk to withdraw from the election ... Captain's party in tears ..!

ஏனென்றால், நாங்க சீனியர் கமல் ஜூனியர் அவருடன் கூட்டணி வைச்சா எங்க மானம், மரியாதை என்னாவது என்பது மாதிரி விஜய பிரபாகரன் வீர வசனம் ஏற்கனவே பேசியுள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. ஆக, 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடுவதற்குள் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு படாதபாடு பட்டு விடுவார்கள் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில் தனித்து விடப்பட்டுள்ள கேப்டன் கட்சி, தன் அங்கீகாரத்தை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, அறிவாலயத்துக்கு துாது அனுப்பி, பதிலுக்காக காத்திருந்தது. அங்கீகாரமும், சின்னமும் தங்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில், 6 தொகுதியாவது ஜெயித்தால்தான் சாத்தியம் என்பதால், ரொம்ப யோசித்து யோசித்து, வேறு வழி புலப்படாமல், தி.மு.க.,வுக்கே துாது அனுப்பினர்.​dmdk to withdraw from the election ... Captain's party in tears ..!

10 தொகுதிகள் தருவதாக சொன்ன தி.மு.க., நிதி தர மறுத்து விட்டது. அதை, தே.மு.தி.க., ஏற்காததால், வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., தலைமை, அறிவித்து விட்டது. இதையடுத்து மீண்டும், அ.ம.மு.க.,வுடன் பேச துவங்கியுள்ளது. தினகரனும் செலவுக்கு பணம் தர மறுப்பதால், அங்கும் இழுபறி நீடிக்கிறது. விஜயகாந்தை, தினகரன் சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால், சந்திப்பு நடக்கவில்லை.dmdk to withdraw from the election ... Captain's party in tears ..!

கூட்டணி விஷயத்தில், தே.மு.தி.க., தலைமை தள்ளாடுவது, தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டியிடவும், அவர்கள் விரும்பவில்லை.எனவே, கவுரவமாக தேர்தலை விட்டு ஒதுங்கிக் கொள்வது நல்லது என நினைக்கின்றனர். தனித்துப் போட்டியிட முடிவெடுத்தால், முதலுக்கே மோசமாகி விடும் என, மாவட்ட செயலர்களும் தலைமையை எச்சரித்துள்ளனர். ஆகையால் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு தேமுதிக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios