தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர், மக்கள் நலக்கூட்டணி சார்பில் தேமுதிவை சேர்ந்த மதிவாணன் என்பவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் 91,303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது எதிர்த்து போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகர் 53,573 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் 6,276 வாக்குகள் வெற்றிருந்தார்.

இந்நிலையில். மக்கள் நலக்கூட்டணி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து  ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தேமுதிக கட்சி விஜயகாந்த் கையில் இல்லாததே கட்சியை விட்டு வெளியேற காரணம். 41 தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தேமுதிக சொல்வதிலிருந்து கட்சி நிலை தெரிகிறது. தேமுதிகவில் நடக்கும் எதுவும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு தெரியாது என்றார்.