தூக்கு தண்டனை கொடுத்தே தீர வேண்டும்.. மாணவி சத்யா கொலை வழக்கில் விஜயகாந்த் கருத்து !
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கை போன்றே சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை செய்த சதீஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க..தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!
அதில், 'கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 2016ல் சுவாதி, 2021ல் சுவேதா, தற்போது சத்யபிரியா என ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.
இதையும் படிங்க..காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி
ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். குற்றவாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை