Asianet News TamilAsianet News Tamil

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனாவா?... பரிசோதனை முடிவு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

DMDK Leader Vijayakanth corona test result is negative
Author
Chennai, First Published May 19, 2021, 5:13 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட எங்கும் உரையாற்றவில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் முகத்தை பார்த்ததே தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

DMDK Leader Vijayakanth corona test result is negative

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானதை அடுத்து தேமுதிக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. 

DMDK Leader Vijayakanth corona test result is negative

அதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார், எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்படிருந்தது. 

DMDK Leader Vijayakanth corona test result is negative

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் படி விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதால் அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios