சென்னையில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த அவரது கட்சியினர் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகளை பார்க்க முடிந்தது.

சென்னையில் நடைபெற்ற கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த அவரது கட்சியினர் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகளை பார்க்க முடிந்தது.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் பாதியிலேயே சென்னை திரும்பினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா இல்லையா என்கிற தகவலை தற்போது வரை தே.மு.தி.க ரகசியமாக வைத்துள்ளது. ஆனால் சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் போது கேப்டன் இருந்தததும் அங்கிருந்து திரும்பி வரும் போது கேப்டன் இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.



அமெரிக்கா செல்வதற்கு முன்னர் கேப்டன் நடையில் சிறிய அளவில் மட்டுமே தடுமாற்றம் இருந்தது. ஆனால் அவருடைய முகம் மற்றும் கண்களில் எவ்வித கலக்கமும் அப்போது இல்லை. ஆனால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கேப்டன் கலைஞர் நினைவிடத்திற்கு நடந்து வந்ததை பார்த்த போது பலரும் பதறிப்போகினர். காரணம் கேப்டன் நடையில் அந்த அளவிற்கு தடுமாற்றம் இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற தே.மு.தி.கவின் பக்ரீக் கொண்டாட்டத்தில் கேப்டன் பங்கேற்றார். அப்போதும் கூடம் கேப்டனை கைத்தாங்கலாகவே அழைத்து வந்தனர். வந்தவர் அனைவருக்கும் பிரியானியை கொடுத்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இருக்கையில் அமர்ந்தவர் எழவும் இல்லை, நிகழ்ச்சியில் பேசவும் இல்லை. இந்த நிலையில் தான் கேப்டனின் பிறந்த நாள் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று கொண்டாடப்பட்டது.

இதற்காக தே.மு.தி.க தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க கேப்டன் வந்ததை பார்த்த சில தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறிவிட்டனர். சிங்கம் போல் வரும் எங்கள் கேப்டனுக்கு என்ன ஆனது? என்று அவர்கள் புலம்ப, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்து சென்றனர்.