ஓவராக பில்டப் காட்டியும், மானாவாரியா பேரம் நடத்தியும் கூட்டணி போட்ட தேமுதிகவும்,  வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி  பாமகவும் இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எக்ஸிட் போல் ரிசல்டில் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்பட்ட நிலையில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகிவிடும் என தெளிவாகவே தெரிகிறது. அதேபோல, தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மட்டுமே முன்னிலையில் இருப்பதால் பாமகவும் ஆறு தொகுதிகளில் படு தோல்வியை சந்திக்கும் என தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைக்க காங்கிரஸ் பிஜேபி களத்தில் இறங்கிய நேரத்தில், தேமுதிக நடத்திய கூட்டணி பேரம் அப்பட்டமாக அரங்கேறியது. அதிமுக பிஜேபி கூட்டணியில் சேர ராஜ் சபா பதவி, டபுள் டிஜிட்டல் சீட், கோடிக்கணக்கில் பணம் என மானாவாரியாக பேராசையில் இருந்தார் பிரேமலதா மற்றும் சுதீஷ், ஆனால் கூட்டணி டீல் சரியாக அமையாததால் திமுகவில் பேரம் பேச ஒரு குரூப்பை அனுப்பி, பிஜேபி - அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தார் பிரேமலதா. 

விடுவாரா துரைமுருகன்? மொத்தமாக மீடியா முன் தேமுதிகவில் பேரத்தை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்ட தேமுதிகவுக்கு வேறு வழியே இல்லாமல், அதிமுக பிஜேபி கூட்டணியில் 4 சீட்டுக்கு மடிந்தது.

அடுத்ததாக,  பாமகவும் வட மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லி 7 சீட் வாங்கி அன்புமணியைத் தவிர மற்ற தொகுதிகளை பரிதாபமாக பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், இந்த இரண்டு கட்சிகளுமே இனி எந்த தேர்தலிலும் பேரம் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.