14 ஆண்டுகளுக்கு முன்வு நடிகர் விஜயகாந்த் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைர் தொடங்கினார். வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அந்த கட்சி விஜயகாந்த் உடல் நிலை குன்றியதால் தற்போது சற்று டல் அடித்து வருகிறது.

தேமுதிகவின் வாக்கு சதவீதமும் தேர்தலுக்கு தேர்தல் குறைந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது. ஆனால் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு விஜயகாந்தின் உடல்நலம் குன்றியது.

இதையடுத்த அவர் வெளியாடுகளுக்குச் சென்று சிகிக்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் , தே.மு.தி.க.,வின், 14வது ஆண்டு விழாவை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தொண்டர்களுக்கு  கடிதம் எழுதியிள்ளார்.

அதில் வசாயிகள், மீனவர் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, மணல் கொள்ளை, மது விற்பனை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்முறை, சுகாதார பிரச்னை என, எத்தனையோ பிரச்னைகள், தமிழகத்தில் தீர்வே இல்லாமல் உள்ளன.


இப்பிரச்னைகளை தீர்க்கவும், தமிழகத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற, நிலையை உருவாக்கவும், தே.மு.தி.க., தொடர்ந்து பாடுபடும். கட்சியினர், உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன்எப்போதும் இருப்பதை காட்டிலும், பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

.
வரப்போகும் தேர்தலில், தே.மு.தி.க., தவிர்க்க முடியாத கட்சி என்பதை, உழைப்பால் உணர்த்துவோம். உண்மையான கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், என் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், கட்சியில் உள்ள லட்சக் கணக்கான நல்ல உள்ளங்களுடன், என் பயணம் தொடரும் என விஜயகாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

.