முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சி கிடையாது என்றும், எங்களின் பங்காளிதான் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக 2, 3, 4 ஆக பிளவுபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு சிறையில் உள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். 

அப்போது பேசிய அவர், கட்சியை பலப்படுத்தும் செயலில் இறங்கப்போவதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்த சென்றவர்களை ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இரு அணிகளையும் இணைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சி கிடையாது என்றும் எங்களின் பங்காளிதான் என்றும் கூறினார். பிரிந்து சென்றவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் திவாகரன் தெரிவித்தார்.